Wednesday, December 18, 2013

பூமகள் கேள்வன்

பூமகள் கேள்வன்பொன் னைடையன் புட்கொடி யோன்புனித
னாமகள் கோனைத்தன் னாபியிற் றந்தவ னான்மறையின்
பாமய னச்சுதன் பங்கயந் கண்ணன்பஞ் சாயுதன்றாள்
சேமமன் றெண்ணியென் சிந்தையிற் சென்னியிற் சேர்த்துவனே.

(இலக்குமியின் நாயகரும், பீதாம்பரத்தை உடையவரும், கருடக் கொடியை உடையவரும், களங்கமற்றவரும், சரசுவதியின் நாயகனாகிய பிரமாவைத் தன் உந்திக் கமலத்தினின்று தோற்றுவித்தவரும், நான்கு வேதங்களின் வடிவானவரும், அழிவில்லாதவரும், செந்தாமரை மலர்போன்ற கண்களை உடையவரும், சங்கு, சக்கரம், தண்டு, வில், வாள் என்னும் பஞ்சாயுதங்களையும் உடையவருமாகிய நாராயணமூர்த்தியுடைய திருவடிகளை நான் நுதலிப் புகுந்த நூலுக்கு காவலாம் என்று நினைத்து, மனத்திலும் சிரசிலும் இருத்திக் கொள்வேன்.)

No comments:

Post a Comment