Wednesday, December 18, 2013

கருப்பைக்கும் முட்டைக்கும் கல்லினுள் தேரைக்கும்.....

கருப்பைக்கும் முட்டைக்கும் கல்லினுள் தேரைக்கும் .......

தனக்கு கிடைத்த அமிர்தத்தையும், கருநெல்லிக் கனியையும் தானுண்டு உடம்பு பெறாது ஔவைக்கு கொடுத்த பெருவள்ளல். ஔவையின் சகோதரன் என்றும் கூறுவர். 

அதியமான், ஔவை, இவர்களின் தாய், தந்தையருக்கு ஒரு பழக்கம் உண்டாம். இவர்கள் எந்த இடத்தில் குழந்தையைப் பெறுகிறார்களோ அந்த இடத்திலேயே அந்த குழந்தையை விட்டுவிட்டுச் சென்று விடுவார்களாம். அதுபோலவே, அந்தத் தாய், அதியமானை பெற்றவுடன் அந்த இடத்திலிலேயே அவனை விட்டுச் செல்ல வேண்டிய நேரம் வரும்போது, அவனைப் பெற்ற தாய் கலங்கி நின்றாள்.

 இதைப் பார்த்த அந்தக் குழந்தையானது, தான் பிறந்தவுடன் தன்னை விட்டுப் போக வருந்தி கலங்கி நின்ற தாயைப் பார்த்து, ‘இறைவன், அவன் படைத்த எல்லா உயிரினங்களுக்கும் கண்டிப்பாக அதனதன் ஆகாரத்தை கொடுத்து விடுவான். அதுபோல, பிறந்த கைக்குழந்தையாக இருக்கும் எனக்குறிய உணவையும் அவனே கொடுத்து விடுவான். கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும், கருப்பைக்குள் இருக்கும் சிசுவுக்கும் உணவளிக்கும் இறைவன் எனக்கு உணவளிக்காமல் இருப்பானா’ என்று தன் தாயை ஆறுதல் படுத்தி, ‘கருப்பைக்கும் முட்டைக்கும் கல்லினுள் தேரைக்கும் . . .. .’ என்ற கவியைச் சொல்லி தாயை தேற்றியவன்.

No comments:

Post a Comment