Saturday, March 29, 2014

சேக்கிழாரின் பெரியபுராணம்

சேக்கிழார்:
தொண்டை நாட்டிலே குன்றத்தூரிலே பிறந்தார். சேக்கிழார் என்பது அவருடைய மரபுப் பெயர். இவர் மிகுந்த கல்வி அறிவுடையவர். அப்போது இருந்த அநபாய சோழ மகாராஜா இவரைத் தமக்கு மந்திரியாக வைத்துக் கொண்டார். இவருக்கு 'உத்தமசோழப் பல்லவர்' என்ற வரிசைப் பெயரையும் கொடுத்தார் மன்னர்.
அப்போதுள்ள மக்கள் சீவக சிந்தாமணியை அதன் சொற்சுவைக்காக கற்பதைப் பார்த்து மன வேதனையானார்.
ஆகவே, முக்திக்கு சாதனமான சிவனடியார் சரித்திரமாகிய பெரியபுராணத்தை பாடி அருளினார்.
இந்த பெரியபுராணம் சிதம்பரத்திலே சபாநாயகர் சந்நிதியிலே திருவருளால் எழுந்த அசரீரி வாக்காகிய 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' என்னும் முதல் அடியை கொண்டு ஆயிரம் கால் மண்டபத்தில் பாடி முடிக்கப்பட்டது.
பக்தி பரவசம் பெருக பாடும் சக்தி பெற்றவர். பழம் கர்ண பாரம்பரியத்தில் இருந்து வந்த அடியாருடைய சரித்திரங்களை இவர் பாடி முடித்து இந்த சபாநாயகர் சபையிலே அரங்கேற்றினார். இதனாலேயே, சோழமகாராஜா இவருக்கு 'கனகாபிஷேகம்' நடத்தி, இவரையும், பெரியபுராணத்தையும் பட்டத்து யானை மேல் ஏற்றி தானும் அதில் ஏறிய மன்னன், சேக்கிழாருக்கு சாமரம் வீசிக் கொண்டே சென்றான். பின்னர், சேக்கிழாருக்கு ஞானமுடி சூடினான்.
(இது சுமார் 800 வருடங்களுக்கு முன்னர்).


No comments:

Post a Comment