Sunday, October 5, 2014

நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது!

It is better that ten guilty escape than one innocent suffer -- Sir William Blackstone.

பத்து குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் தப்பில்லை; ஆனால் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் சட்டம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். -- இதை 18ம் நூற்றாண்டில் சொன்னவர் சர் வில்லியம் பிளாக்ஸ்டோன்.

Sir William Blackstone
 சர் வில்லியம் பிளாக்ஸ்டோன் என்பவர் மிகப் பெரிய ஆங்கில சட்டமேதை. நீதிபதியும்கூட.

இவர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். (1723 முதல் 1780 வரை).
இவர் எழுதிய பிரபலமான புத்தகம்தான் 'இங்கிலாந்து சட்டங்களைப் பற்றி' (Commentaries on the Laws of England) என்ற புத்தகம்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் அவர்கள் இந்த புத்தகத்தைப் படித்துவிட்டுத்தான் வக்கீலுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வக்கீலாக வந்தார் என்றும் சொல்வார்கள்.

ஒரு நேரத்தில், இவர் வக்கீல் தொழிலை விட்டுவிட்டு, ஆங்கிலேய சட்டங்களைப் பற்றி சொற்பொழிவு ஆற்றி வந்துள்ளார்.

"இவர் மட்டும் அந்த நேரத்தில் இந்த புத்தகத்தை எழுதாமல் இருந்திருந்தால், ஆங்கில மொழி பேசும் நாடுகள் எல்லாம் ஒரே பொதுச்சட்டத்தில் வந்திருக்க முடியாது" என்று சொல்வார்கள்.

இந்த Commentaries on the Laws of England  என்னும் புத்தகம் பலமுறை மறுபதிப்பும் (Reprint)செய்யப் பட்டுள்ளது.

இவரைப் பற்றி சொல்லவேண்டுமென்றால்:- வசதியான பெற்றோருக்கு பிறந்து நன்றாகப் படித்து வரும்போது, அவரின் பெற்றோர்கள் இறந்ததால், கல்லூரியில் உதவித்தொகை பெற்று படிக்கும்படி ஆனது. கவிதை நன்றாக எழுதுவார். அதற்காக பரிசும் பல வாங்கி உள்ளார். அதனால் படிக்க உதவிப்பணம் கிடைக்கும் வாய்ப்பு கிடைத்ததாம்.

வக்கீல் தொழிலுக்கு வந்தபின்னர், தொழிலில் அவ்வளவு வேகம் இல்லை. எப்போதாவதுதான் கேஸ் வருமாம். இவர் பணக்கார வக்கீல் வகையை சேர்ந்தவர் இல்லை என்பதால் இவருக்கு தொழில் இராசியும் இல்லையாம். இனி கோர்ட்டுக்கு போக வேண்டாம் என்று கூட முடிவெடுத்தாராம்.

இவர் முதன்முதலில் எழுதிய சட்ட நூலுக்குப் பெயர் An Analysis of the Laws of England. சுமார் 200 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை 1756ல் வெளியிட்டார்.


No comments:

Post a Comment