Monday, October 6, 2014

ஹயக்கிரீவ

கற்கி அவதாரம்:
குதிரை முகமும், மனித உடலும் கொண்ட உருவத்தில் உடைய கற்கி அவதாரம்.
இந்த உருவத்தை 'ஹயக்கிரீவன்' என்பர். (Hayagriva)
விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் இதுதான்.
கலியுகத்தில் கடைசியாக தோன்றும் அவதாரமும் இவர்தானாம்.
ஹய என்றால் குதிரை; க்ரீவ என்றால் தலை;
இவர் வெள்ளை வெள்ளேரென்று இருப்பாராம். தாமரையில் அமர்ந்திருப்பாராம்.
அறிவின் உச்சமாம். (The power of knowledge).
பிரம்மாவிடமிருந்து வேதங்களை பறித்துச் சென்றதை மீட்பதற்காக இவர் ஏற்கனவே அவதரித்தார் என்றும் சொல்வர்.
இனிமேல் தான் அவதரிக்க உள்ளார் என்றும் சொல்வர்.
கலியுகத்தின் முடிவில் இவர் அவதரித்து கெட்டவைகளை அழிப்பார் என்றும், அதன்பின் ‘சத்திய யுகம்’ தோன்றும் என்றும் சொல்வர்.

இதேபோல ஹயகிரீவ விபரம் கிரேக்க இதிகாசத்திலும் உள்ளது. பெகாசஸ் (Pegasus) என்பது இறக்கைகள் கொண்ட பறக்கும் வெள்ளைக்குதிரை. இதை ஒற்றைக்கொம்பு குதிரை (Unicorn) என்றும் சொல்வர்.

கலியுகம் தொடங்கி 5000 வருடங்கள் ஓடிவிட்டன.
இன்னும் 4 லட்சத்து இருபத்தேழாயிரம் வருடங்கள் உள்ளன.
(மொத்த கலியுக வருடங்கள் 4,32,000).
கலியுக ஆரம்பத்தில் ஸ்ரீகிருஷ்ணன் வந்தான். பகவத் கீதை தந்தான். அது கலியுக மக்கள் வாழ்வதற்கான புத்திமதி.
கலியுக முடிவில் கற்கி என்னும் ஹயகிரீவ (பறக்கும் வெள்ளைக்குதிரை) அவதாரமாம். அவர் கெட்டவைகளை அழித்து நல்லவர்களை உருவாக்கிச் செல்வாராம். அந்த சத்திய யுகத்தில் எல்லோருமே நல்லவர்களாக இருப்பார்களாம். கெட்டவர்களைப் பார்க்கவே முடியாதாம்.
(இருந்து பார்க்க நாம் இருக்கமாட்டோம்! எனவே இப்போதே அந்த உலகத்தை கற்பனையில் பார்த்துக் கொள்வோம்!)


1 comment: