Tuesday, December 8, 2015

இந்தியா என்கிற பாரத்

இந்தியாவுக்கு என்ன பெயர் வைக்கலாம்?
இந்தியா என்னும் பெயரை மாற்றி பாரத் என்று வைக்க வேண்டும் என ஒரு இந்தியனுக்கு ஆசை வந்துவிட்டது; நிரஞ்சன் பட்வால் (from Maharashtra) என்ற ஒரு சமூக ஆர்வலர் தன் ஆசையை பொதுநல வழக்காக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்;
அவர் சொல்கிறார், “இந்திய அரசு சட்டம் 1935ஐ ரத்து செய்து இந்திய சுதந்திர சட்டம் 1947ஐ அமல்படுத்தியதும், நமது நாட்டுக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது; ஆனால் இந்திய நாட்டுக்கு பாரத், இந்துஸ்தான், இந்த், பாரத் வருஷ் என்பதுபோலதான் பெயரிடப்பட வேண்டும் என்பது இந்திய அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரையாகும். எனவே தற்போது சூட்டப்பட்டுள்ள இந்தியா என்ற பெயருக்கு பதிலாக மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு பெயரை இந்திய நாட்டின் பெயராக பயன்படுத்த வேண்டும்; அரசு, மற்றும் ஆட்சிப் பணிகளுக்காக இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதை மத்திய அரசு நிறுத்துமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று அவரின் மனுவில் கேட்கிறார்.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா இவர்கள் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த மனு ஏப்ரல் 25, 2015ல் விசாரணைக்கு வந்தது; மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி பதில் கேட்டது;
இதில் மத்திய அரசு பதில் தாக்கல் செய்தது; அந்த பதிலில், “இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவதற்கான சூழ்நிலை எதுவும் தற்போது ஏற்படவில்லை; இதுபோன்ற கோரிக்கை தற்போது தேவையற்ற ஒன்று; இந்திய அரசியல் சாசன சட்டத்தின் ஆர்ட்டிகிள் 1(1)ல் இந்தியா என்கிற பாரத் என்பது பல மாநிலங்களை உள்ளடக்கியது என்றே குறிப்படப்படுள்ளது; இந்திய அரசியல் சாசன சட்டத்தில் இந்த ஒருஇடத்தில்தான், இந்தியாவை ஆட்சிப்பணிக்கும் மற்ற நேரங்களிலும் பயன்படுத்த குறிப்பிடப்பட்டுள்ளது; எனவே இதை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கோரியது;
“There is no change in circumstances to consider any change in Article 1 of the Constitution of India.” Article 1(1) says, “India, that is Bharat, shall be a Union of States.” This is the only provision in Constitution on how this country be called or official and unofficial purposes.Regarding the country’s names were deliberated upon extensively by the Constituent Assembly during drafting of the Constitution and clauses in Article 1 were adopted unanimously. Bharat did not figure in the original draft of the Constitution and it was during debates that the Constituent Assembly considered names such as Bharat, Bharatbhumi, Bhartvarsh, India that is Bharat. Bharat that is India and Bharat as is known in English language India. It said there was no change in circumstances since the Constituent Assembly debated the issue to warrant a review.
இந்த சமூக ஆர்வலர் நிரஞ்சன் பட்வால் ஏற்கனவே இப்படி ஒரு பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்; ஆனால், முதலில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்குமாறு சுப்ரீம் கோர்ட் அறிவுரை கூறி அந்த மனுவை தள்ளபடி செய்தது; ஆனால் மத்திய அரசு அவரின் கோரிக்கையை நிராகரித்தது; எனவே இந்த பொதுநல மனுவை மறுபடியும் தாக்கல் செய்திருக்கிறார்; நிரஞ்சனின் வக்கீலீன் வாதம் என்னவென்றால், “இந்தியா என்ற வார்த்தை பிரிட்டீஸ் நம்மை ஆண்ட போது உருவாக்கிய வார்த்தை; 1935 சட்டத்தை ரத்து செய்யும் போது இந்தியா என்ற வார்த்தையை உபயோகித்துள்ளனர் அவ்வளவே; காலங்காலமாக புராணங்களிலும் பாரத் என்ற வார்த்தையே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது;
“India was coined during colonial era and the country, historically and in scriptures, is called Bharat. India was used in Article 1 for reference, in order to repeal Government of India Act 1935 and Indian Independence Act 1947.”
புராண சரித்திரம்: சகுந்தலை வயிற்றில் துஷ்யந்தனுக்கு பிறந்த புத்திரன் பரதன்; இவன் ஆரிய தேசம் முழுவதையும் கட்டி ஆண்டமையால் இந்த தேசத்துக்கு பரதவருஷம் (பரதநாடு) என்று பெயர் வழங்கலாயிற்றாம்; இவனுடைய ஒன்பதாம் சந்ததி குரு என்ற மன்னர். குருவின் பதினான்காம் சந்ததி சந்தனு என்ற மன்னர்; சந்தனுவுக்கு நான்காம் சந்ததிகள்தான் பாண்டவர்கள்;
பரத கண்டம்: பாரதவருஷம் அல்லது பாரத கண்டம் என்பது விதேகம், ரேபதம், மத்தியம், பரதம் என நான்கு கண்டங்களை கொண்டது; விதேகம் என்பது இமயத்துக்கு மேற்கே உள்ள நாடு; ரேபதம் என்பது கிழக்கே உள்ள நாடு; மத்தியம் என்பது இமயத்துக்கும் விந்தியத்துக்கும் நடுவே உள்ள நாடு; பரதம் என்பது விந்தியத்துக்கு தெற்கே உள்ள நாடு;  இந்த நான்கும் சேர்ந்ததுதான் பாரத வருஷம் என்கிற பாரதநாடு;

**

No comments:

Post a Comment