Sunday, March 20, 2016

Life After Death (மரணத்துக்குப் பின்)

Life After Death (மரணத்துக்குப் பின்)
Katha Upanishad:
"I shall take the Katha Upanishad in story form so that you may listen to it with interest and keenness. Here we find a contrast in the study of worship of God by people of different temperaments for different purposes.
Story:
 Elderly father Rishi Vajasravas devoted to the lower sacrificial path of action (Karma) performed the Visvajit sacrifice, with the object of gaining power over the whole universe, while his young and only son, Nachiketas was inquisitive of the higher path of knowledge of Self, and the secret of what happened after death.
After watching his father giving away gifts of good, cows and all other belongings, the impatient boy asked his father twice: “To whom will you give me?” The father answered not, but the boy persisted a third time. The old man lost his patience and burst out in a temper: “To Death I will give you.”
True to the word of the father, the son proceeded to the abode of the Lord of Death, whom the Hindus call as Dharama Raja, which means the representative of Almighty God meeting out justice to all souls. The Lord was not at home, and the boy waited at his door without food for three days.
On returning home, Yama, (God of Death) expressed regret and offered three boons as recompense. As the first boon, Nachiketas asked for his father not to be angry with him, and to receive him back with joy and understanding when he returned home. It was readily granted.
As the second boon, he asked for the secret of the immortality which is attained in heaven by those worshippers who performed the Fire-Sacrifice to be imparted to him. This too was readily granted.
Thereupon, Nachiketas addressed Yama thus: “After a man is dead, there is this doubt: some say he is; some that he is not. I should like to hear the actual truth from you. This is the third boon I seek.”
The Lord of Death was taken aback and said: “On this question, the very Gods have their doubts. It cannot be solved easily. So subtle is the truth. Do please ask for another boon, say sons and grandsons, kingdom, gold, elephants, horses etc., and long life to live, with every material prosperity. Do not persist in questioning about life after death.”
Nachiketas replied: “Of a single day’s duration is the joy derived from the possession of the kingdom, gold and other goods mentioned by you. Man can never be satisfied with them for all time. They merely dissipate the energy of the senses. I do not want them. Please grant me the boon I beg for. You yourself say that even the Gods have not got it after becoming Devas. I do not think I can find another teacher like you to let me know this secret.”
Satisfied with the equipment of the young man, and convinced of the seriousness and sincerity of his aspiration, the Lord of Death taught him that secret knowledge. He said that the imperishable Self is not to be won by teaching, intellect or much learning. It is to be won only by him, who seek Self; the him this Self reveals it nature.
Lord Krishna expounds elaborately in Bhaghwad Gita the teachings embodied in this Upanishad. One of such passage runs:
“whatever moving there is in the world, all that is embraced by the Lord; enjoy by renouncing it (the world); covet not anybody’s wealth.”

 (This is a part of the excerpts of the speech of Mr. Ramachandra, the highly esteemed Editor of the internationally famous ‘Religious Digest’, who delivered this speech to sixty four Roman Catholic Nuns, belonging to different Orders, at the Aquinas University College, Colombo in 1971.)
**
நசிகேதன் கதை:
வஜாசிரவஜர் என்னும் வேதியர், யாகம் செய்து முடித்தவுடன், தன்னிடமுள்ள பொருள்களை எல்லாம் தானம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்; அவருக்கு ஒரே ஒரு மகன்; அவன் பெயர் நசிகேதன்;
அந்த நசிகேதன் தன் தந்தையைப் பார்த்து, “தந்தையே! உங்களிடம் இருப்பதை எல்லாம் தானமாகக் கொடுக்கிறீர்களே! என்னையும் யாருக்காவது தானம் கொடுப்பீர்களா? என்று கேட்கிறான்; இரண்டு முறை கேட்டும், அவன் தந்தை பதில் சொல்லவில்லை; இவன் விடாமல் மூன்றாம் முறை கேட்கும்போது, தந்தை கோபமாக, “உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன்” என்று கூறிவிட்டார்;
மகன் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு, எமன் இருக்கும் இடமான எமலோகத்துக்கே வந்து விட்டான்; இவன் வந்தபோது, எமன், அவர் வீட்டில் இல்லை; எங்கோ வேலையாக வெளியில் போயிருக்கிறார்; மூன்று நாட்கள் ஆகிவிட்டது அவர் வருவதற்கு; அதுவரை, உணவு, உறக்கம் இல்லாமல், எமன் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறான் அந்தச் சிறுவன் நசிகேசன்;
எமன், வீட்டுக்கு திரும்பி வந்து பார்க்கிறார்; இவன் இப்படி பிடிவாதமாக காத்திருப்பதாகச் சொன்னார்கள்; அவன் மேல் இரக்கம் கொண்டு, “உனக்கு தேவைப்படும் மூன்று வரங்களைக் கேள் தருகிறேன்” என்று கூறுகிறார்;
முதல் வரம்: “நான் என் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது, என் தந்தை என்னை திட்டாமல், ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கேட்கிறான்; எமனும், “சரி, தந்துவிட்டேன்” என்கிறார்;
இரண்டாவது வரம்: “பூமியில் இறந்தவர்கள், எமனுலகு செல்லும் வழியில் இருட்டில் தடுமாறித் திரிகிறார்கள்; இங்கு இறந்தவர்களுக்கு யாகம் செய்தால், அவர்களை மோட்சத்துக்கு அனுப்பிவிட வேண்டும்” என்று கேட்கிறான்; அதுவும் தந்துவிட்டேன் என்கிறார் எமன்; அதன்படி மோட்சத்துக்கு செல்ல செய்யப்படும் யாகங்களை சொல்லித் தருகிறார்;
மூன்றாவது வரம்: “மனிதனின் மரணத்துக்குப்பின், அவன் வாழ்கிறான் என்று சிலர் சொல்கிறார்கள்; அப்படி வாழமுடியாது என்றும் சிலர் சொல்கிறார்கள்; உண்மையில் மரணத்துக்குப் பின் நடப்பது என்ன? எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்கிறான்;
எமனுக்கு தர்ம சங்கடமாகி விட்டது; “நசிகேதா! இந்த விஷயத்தில், தேவர்களுக்குக்கூட சந்தேகம் உள்ளது; இது இன்றுவரை தீர்ந்தபாடில்லை; எனவே உனக்கு என்னென்ன பொருள்கள் வேண்டும் கேள், நீண்ட ஆயுளைக் கேள்! தருகிறேன்” என்று ஆசை வார்த்தை சொல்லி அவனை திசை திருப்பப் பார்க்கிறான்;
நசிகேதன் மசியவில்லை; “தேவர்களுக்கே இதில் சந்தேகம் உள்ளது என்றால், என் கேள்விக்கு பதிலை, உன்னைத் தவிர வேறு யாரும் சொல்ல மாட்டார்கள்; எனவே நீயே எனக்கு தெளிவாக்கிவிடு” என்று கேட்கிறான்; இந்த உலகில் எது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ அதைத் தெளிவு படுத்து!” என்று கேட்கிறான்;
எமன், “இந்த உலகில், மேலானது என்றும் சுகம் தருவது என்றும் இரண்டு உண்டு; மேலானதை ஏற்றுக் கொண்டால் நன்மை கிடைக்கும்; சுகமானதை ஏற்றுக் கொண்டால் வீழ்ச்சிதான் கிடைக்கும்” என்றும் “அறிய வேண்டிய ரகசியம் ஆன்மா பற்றியது; ஆன்மாவை அறிந்தவனுக்கு குழப்பமே இல்லை” என்று கூறுகிறான்;
**

No comments:

Post a Comment