Wednesday, November 23, 2016

ஏரிஸ் கடவுள் (Ares)

ஏரிஸ் கடவுள் (Ares: E:ri:z:)
இவன் சண்டைக் கடவுள்; தலைக் கவசம் அணிந்திருப்பான்; ஒரு கையில் ஈட்டியும், மறு கையில் தடுப்புக் கவசமும் வைத்திருப்பான்; சண்டைக்குப் போவதுபோலவே இருப்பான்; ஆனால் இவன் பயந்தாங்கொள்ளி! ஒருநாளும் உண்மையில் சண்டை போட்டது கிடையாது; கிரேக்கர்கள் பொதுவாக சண்டையை விரும்ப மாட்டார்களாம்! அதனால், இவனை ஒரு கடவுளாகவே கிரேக்க மக்கள் நினைக்க மாட்டார்களாம்!

தலைமைக் கடவுளான ஜீயஸுக்கும் அவனின் ஒரு மனைவியான ஹெராவுக்கும் என்ற பெண் கடவுளுக்கும் பிறந்தவன்; பிறந்ததிலிருந்தே பெரிய சத்தம் மட்டும் கொடுத்துக் கொண்டிருப்பான்; ஆனால் சண்டை போட மாட்டான்; பெரிய வீரனைப் போல பாசாங்கு செய்து கொள்வான்; அப்படி மிரட்டியே காரியம் சாதித்துக் கொள்வான்! ஆனால் இன்னொரு பெண் கடவுளான ஏதனா (Athena) உண்மையில் சண்டைக் கடவுள்; இவள் உண்மையில் பெரிய சண்டைக்காரி!

ஒருமுறை, அரக்கர்களுக்கும் கடவுளுக்கும் சண்டை ஏற்படுகிறது; அரக்கர்கள் இந்த உலகை ஆள வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; அதனால் கடவுள்களிடம் பெரிய போரை ஏற்படுத்துகிறார்கள்; முதலில் இந்த பயந்தாங்கொள்ளி ஏரிஸ் உடன் சண்டையிட்டு, அவனை வீழ்த்தி, அவனை ஒரு ஜாடிக்குள் போட்டு மூடி விடுகிறார்கள்; ஏரிஸ் கத்திக் கதறுகிறான்; தன்னை காப்பாற்றும்படி கூக்குரல் இடுகிறான்; ஆனால் மற்ற கடவுள்கள், இவனின் கூக்குரலை கண்டு கொள்வதாக இல்லை; இவன் வெளியே வந்து மட்டும் சண்டையிடவா போகிறான்; ஜாடிக்கு உள்ளேயே இருக்கக்கட்டும் என்று விட்டு விடுகிறார்கள்; மற்ற கடவுள்கள் எல்லோரும் சேர்ந்து அரக்கர்களுடம் போர் புரிகிறார்கள்; அரக்கர்களை கொன்று வெற்றி பெறுகிறார்கள்; பின்னர், நிதானமாக வந்து, ஜாடிக்குள் இருக்கும் ஏரிஸை வெளியே விடுவிக்கிறார்கள்!  “ போருக்கு முன்னரே உன்னை விடுவித்திருந்தால், நீ எப்படி சண்டை போட்டிருப்பாய் என்று எங்களுக்குத் தெரியும்” என்று ஏளனமாக சிரித்து அவனை வெறுப்பேற்றுகிறார்கள் மற்ற கடவுள்கள்;

ஏரிஸின் இந்தக் குணத்தால், இவன் எப்போதும் ஒரு பக்கமாக இருக்க மாட்டான்; ஒரு கட்சியிலும் இருக்க மாட்டான்; யாருக்கும் நம்பிக்கையாகவும் இருக்க மாட்டான்; எங்காவது சண்டை, போர் நடந்தால் அங்கு சென்று, வேடிக்கை பார்ப்பான்! 

ஒருமுறை, கிரேக்க மக்களுக்கும் டிராய் நகர மக்களுக்கும் போர் ஏற்படுகிறது; அதில் கடவுள்களும் பங்கேற்றனர்; இந்த பயந்தாங்கொள்ளி சண்டைக்கடவுளான ஏரிஸ், தன் தாய்க்கு சத்தியம் செய்து கொடுக்கிறான்; “நான், கிரேக்கர்கள் பக்கமாக இருந்து மற்ற கடவுள்களுக்கு போரில் உதவியாக சண்டை செய்வேன்” என்று சத்தியம் செய்து தன் தாய் ஹெராவுக்கு கொடுக்கிறான்; ஆனால், இவன் அப்ரோடைட் என்ற பெண் கடவுள் மீது காதல் கொண்டுள்ளான்; அவளோ காதல் தேவதை என்னும் காதல் கடவுள் ஆவாள்; அவளோ, டிராய் மக்களான ட்ரோசான்கள் பக்கமாக சேரச் சொல்கிறாள் இந்த ஏரிஸை; இவன்தான் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சேருபவன் ஆயிற்றே!  எனவே அந்த சண்டையில் கடவுள்பக்கம் இவன் நிற்கவில்லை; இது ட்ரோசான்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது; ஆனால், டையோமெடஸ் (Diomedes) என்னும் கடவுளுடன் சண்டைக்குப் போகிறான்; அந்த டையோமடெஸ் பெரிய போர்வீரன்; இந்த ஏரிஸை ஒரே அடியாக அடித்து தூக்கி எறிகிறான்; பயந்து கொண்டு ஓடிப்போய், ஒலிம்பஸ் பின்னால் ஒழிந்து கொள்கிறான்; தன் தகப்பன் ஜீயஸ் கடவுளிடம் சென்று அழுகிறான்; அவரும் இவன் மீது இரக்கப்பட்டு இவனின் காயத்துக்கு கட்டுப் போடுகிறார்; இந்த மகனைப் பெற்றதற்காக பெருமை கொள்ளவில்லை அவனின் தகப்பன்;

கடவுளின் மகனாக இருந்துகொண்டு சண்டைக்குப் பயம்படுகிறான் இந்த ஏரிஸ்;

இப்படிப்பட்ட ஆட்கள் இப்போதும் இருக்கிறார்கள்!

**

No comments:

Post a Comment